குளத்தில் மூழ்கி சிறுமி பலி!

குளத்தில் மூழ்கி சிறுமி பலி!

குளத்தில் நீராடச் சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு- வாகரை, மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

குறித்த சிறுமியும் சகோதரியும் நேற்று மாலை ஆலம்குளத்திற்கு குளிக்கச்சென்ற போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் மீள் குடியேற்ற கிராமமான குகனேசபுரம் காலிகோவில் வீதி 6ஆம் குறுக்கை சேர்ந்த சன்முகநாதன் விஜய ரூகினி (வயது 12) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் ஆலம்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில், தரம் 6 இல் கல்வி கற்ற மாணவி என தெரிவச்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.