முட்டையின் விலையை குறைக்க தீர்மானம்..!

முட்டையின் விலையை குறைக்க தீர்மானம்..!

நாட்டில் கோழி முட்டையின் விலையினை 2 ரூபாவால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கோழி முட்டையொன்றை 18 ருபாவுக்கு விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.