ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு

ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு விஜயகலா மகேஸ்வரனுக்கு அழைப்பு

அரசியல் பாதிப்புக்குள்ளான சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட குமரன் சர்வானந்தா ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17 ஆம் திகதி அவர்கள் ஜனாதிபதி ஆணையத்தில் முன்னிலையாகவேண்டும் என்று அதில் கேட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சுன்னாகம்; காவல்துறையில் பணியாற்றிய காவல்துறை உறுப்பினர் ஞானலிங்கம் மயூரன் அளித்த முறைப்பாட்டின்; அடிப்படையில் இந்த இருவரையும் வரவழைக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழு முன் நேற்று சாட்சியம் அளித்த ஞானலிங்கம் மயூரன், சிவலோகநாதன் வித்யாவின் கொலை மற்றும் பாலியல் பலாத்காரத்தின் முக்கிய சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் அல்லது சுவிஸ் குமாரை விடுவிப்பதில் முன்னாள் அமைச்சர் நேரடியாக ஈடுபட்டதாக சாட்சியமளித்திருந்தார்.

அத்துடன் கைதி ஒருவர் தப்பியோடிய சம்பவத்தின் பின்னர் தாம் உட்பட 5 காவல்துறை உறுப்பினர்கள் தடுத்துவைக்கப்பட்டதன் பின்னணியின் விஜயகலா மகேஸ்வரன் இருந்திருக்கலாம் என்றும் சாட்சி ஞானலிங்கம் மயூரன் ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.