மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை!

மீண்டும் உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலை தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளதாக பங்குச் சந்தை நிலவரங்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த வாரம் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தது. கொரோனாவிற்குப் பின்னர் உலகம் முழுவதும் போக்குவரத்துக்கள் முற்றாக முடங்கிய நிலையில் இறக்குமதிகள் முழுமையாக தடைப்பட்டிருக்கின்றன.

இந்நிலையில் இலங்கையிலும் தங்கத்தின் விலை உயர்வடைந்திருக்கின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில், நேற்றைய நிலவரப்படி ஒரு பவுண் தூய தங்கத்தின் விலை ஒரு இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதேபோன்று, ஆபரணத் தங்கத்தின் விலை 910 ரூபாவால் அதிகரித்து 91 ஆயிரத்து 660 ரூபாவாக பதிவாகியிருக்கிறது.