மாட்டைக் கடித்தமைக்காக 15 நாய்களை கொலை செய்த நபர்! வவுனியாவில் சம்பவம்

மாட்டைக் கடித்தமைக்காக 15 நாய்களை கொலை செய்த நபர்! வவுனியாவில் சம்பவம்

தான் வளர்த்த மாட்டை கடித்தமைக்காக, 15 நாய்களுக்கு நஞ்சுவைத்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் வவுனியா - மாமடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் அந்த பகுதி பிரதேசவாசிகள் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய இராணுவ வீரர் ஒருவரை மாமடு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நஞ்சு கலந்த இறைச்சியை கொடுத்து நாய்களை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் அந்த பகுதியில் பண்ணையொன்றை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அதிலுள்ள பசுவையும் அதன் கன்றையும் நாயொன்று கடித்து காயப்படுத்தியுள்ளது. இதனால் கோபமடைந்து நாய்களை கொன்றதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.