தலைமை பதவி விவகாரம்! ரணில் போடும் திட்டம்
ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க, பொருளாளர் தயா கமகே மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரை கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த தலைவர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே இதற்கு காரணம் என அவர், இவர்களிடம் கூறியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்த கோரிக்கைக்கு மேற்கூறிய மூவரும் இதுவரை எந்த பதிலையும் வழங்கவில்லை எனவும், இவர்களில் ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோர் கட்சியின் தலைவர் பதவியை பெறும் எதிர்பார்ப்பில் தொடர்ந்தும் இருப்பதாக கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தலைமைத்துவப் போட்டியில் இருந்து விலகிக்கொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ருவான் விஜேவர்தனவை எந்த பிளவுகளும், வாக்கெடுப்பும் இன்றி தெரிவு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரணில் விக்ரமசிங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.