தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் குற்றச்சாட்டு

புகையிரத திணைக்களத்தின் இயந்திரங்கள் மற்றும் வேகக் கட்டுப்பாடுடன் 300 தொடருந்துகள் காணப்பட்டாலும், அவற்றில் 130 தொடருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருவதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சுமார் 150 இயந்திரங்கள் தற்போது பாவனையின்றி காணப்படுவதாக அதன் செயலாளர் இந்திக தொடங்கொட எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், புகையிரத திணைக்களத்தில் இவ்வாறான வளங்கள் காணப்பட்ட போதிலும் அவைகள் முறையாக செயற்படுத்தப்படாமைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளே பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.