அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் - நான்கு சந்தேக நபர்கள் கைது

அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் - நான்கு சந்தேக நபர்கள் கைது

யாழ்ப்பாணம் அனலைதீவில் இரண்டு கடற்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆரம்பத்தில், மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியதை அடுத்து வேலணையைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அனலைதீவில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முறுகலை அடுத்து அவ்விடத்துக்கு சென்ற கடற்படையினர் அதனைத் தீர்த்து வைத்தனர்.

எனினும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர் மதுபோதையில் இருந்ததுடன் கடற்படை முகாமுக்கு முன்பாக வந்து சத்தமிட்டுள்ளனர்.இதனையடுத்து அவர்களை அனுப்பும் முயற்சியின்போது கடற்படை வீரர்கள் இருவருக்கு காயமேற்பட்டது.

சம்பவம் தொடர்பில் கடற்படை ஊர்காவற்றுறை பொலிசில் புகார் அளித்த பின்னர், பொலிசார் இந்த சம்பவத்தை விசாரித்து நான்கு சந்தேக நபர்களை கைது செய்தனர்.