மகிழூந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து

மகிழூந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து

அவிசாவலை-கொஸ்கம பிரதான வீதியின் அம்பலம பகுதியில் மகிழூந்து ஒன்றும் உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவிசாவலை பகுதி நோக்கி பயணித்த உந்துருளி ஒன்று மற்றொரு உந்துருளியை முந்தி செல்ல முற்ப்பட்ட பொழுது குறித்த திசையிலேயே பயணித்த  மகிழுந்துடன் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்து அங்கு பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இவ்வாறு பதிவானது.