சகோதரிகள் இருவர் செய்த காரியம்

சகோதரிகள் இருவர் செய்த காரியம்

பாணந்துறை - நிவ்டாவ பகுதியில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுப்பட்ட பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை காவல் துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்களிடமிருந்து நான்கு இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 கிராம் ஹெரோயின் மீட்க்படப்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்தை சேர்ந்த 40 மற்றும் 45 வயதுடைய சகோதரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த சகோதரிகளிடமிருந்து நான்கு கையடக்க தொலைபேசிகள் வங்கி கணக்கு புத்தகம் என்பன மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.