
ஓய்வூதிய திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஓய்வூதிய திணைக்களத்திற்கு கடமைகளின் நிமித்தம் வருகை தருவோர் திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே பதிவு செயது கொள்ளவேண்டுமென ஓய்வூதிய திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி ஓய்வூதியம் பெறுபவர்கள் இணையவழியில் தமக்கான நேரத்தை ஒதுக்கி கொள்ள முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக ஓய்வூதிய திணைக்களத்தில் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திகதி, நேரம் ஆகியவற்றை ஒதுக்கி கொள்வதன் ஊடாக தேவையற்ற வீண் சிரமங்களை தவிர்த்து கொள்ள முடியும்.
மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள 1970 என்ற விசேட தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியுமென ஓய்வூதிய திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.