இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவிப்பு..!

இன்னும் சில மணித்தியாலங்களில் வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவிப்பு..!

அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்ற 20 ஆம் திருத்தச் சட்டமூலம் இன்னும் சில மணித்தியாலங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே எமது செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தை சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் பிரசுரிப்பதற்கான நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில்,புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல்; இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோஹர டி சில்வா, சஞ்சீவ ஜயவர்தன, சமன் ரத்வத்த, பேராசிரியர் ஜீ.எச்.பீரிஸ், கலாநிதி ஏ. சர்வேஸ்வரன், பேராசிரியர் நசீமா கமுறுடீன், பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோர் இந்த நிபுணர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த நிபுணர் குழுவின் பணிகளுக்கான நிதி, அமைச்சரவையினால் ஒதுக்கிட்டு, இயன்றளவு விரைவில் அந்தக் குழுவுடன் செயற்பட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை ஆரம்பிக்குமாறு நீதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்க பணிகளுக்கு குறிப்பிட்ட காலம் அவசியம் என்பனதனால், அதுவரையில் அரசியலப்பின் ஊடாக அரசாங்கம் எதிநோக்கும் அசௌகரியங்களை தவிர்க்கும் நோக்கில், குறுகிய கால தேவைப்பாடாக, 20 ஆம் திருத்தமாக புதிய அரசியலமைப்பு திருத்தத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்தது.

சட்ட வரைஞரினால் முன்வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புகளும், அதில் பொதுஜன வாக்கெடுப்பு உட்படுத்துவதற்கான விடயங்கள் எதுவும் இல்லை என்ற சட்டமா அதிபரின் நிலைப்பாடு என்ற இரண்டு விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், அதனை வர்த்தமானியில் அறிவிப்பதற்கும் நீதி அமைச்சருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.