சந்நிதியானின் தேர் உற்சவத்தில் சங்கிலி அறுத்த பெண்கள் கைது

சந்நிதியானின் தேர் உற்சவத்தில் சங்கிலி அறுத்த பெண்கள் கைது

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற தேர் திருவிழாவில் சங்கிலி அறுத்ததாக தெரிவிக்கப்பட்டு இரண்டு பெண்கள் ஆலய வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரினால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்கள் இன்றைய தேர் உற்சவத்தில் திருடும் நோக்கில் வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருக்கலாம் என சந்தேகமடைந்துள்ள பொலிஸார், அவர்களுடன் வந்த மேலும் சிலர் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.