சஜித்தை விட்டு மஹிந்தவிடம் தாவிய வேட்பாளர்!

சஜித்தை விட்டு மஹிந்தவிடம் தாவிய வேட்பாளர்!

முன்னாள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தனது ஆதரவினை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் காலி மாவட்டத்தில் போட்டியிடும் மேஜர் டெனாட் பனியாண்டுவகே என்ற வேட்பாளரே தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வலிகியுள்ளார். தேர்தலிருந்து விலகி தனது ஆதரவினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கியுள்ளார்.

அத்துடன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் கொழும்பு விஜேராம மாவத்தையில் வைத்து சந்தித்து கலந்துரையாடியுள்ளார். முதுகெலும்பில்லாத தலைவர்களுடன் அரசியலில் ஈடுபடுவதில் அர்த்தமில்லாமையினால் தான் இந்த முடிவை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலிலிருந்து விலகிய சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் 2 இரண்டாவது வேட்பாளராக இவர் காணப்படுகின்றார். இந்த வார ஆரம்பத்தில் மங்கள சமரவீர தேர்தலிலிருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.