ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்

ஸ்ரீலங்காவிற்கான அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்

அமெரிக்க ராஜதந்திரிகள், இலங்கையின் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகள் மற்றும் இலங்கையின் வெளியுறவு அமைச்சுடன் இணைந்து செயற்படுவார்கள் என்று அமரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுரகத்தின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு வரும் வெளிநாட்டு ராஜதந்திரிகள் பீசீஆர் பரிசோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவர் என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகள் தொடர்பிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜதந்திரிகள் இலங்கைக்கு வரும்போது ராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டில் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு உட்படுகின்றனர்.

இது இலங்கை மற்றும் அமெரிக்காவில் உள்ள பிற இராஜதந்திரிகள் அமெரிக்காவுக்குள் வரும் போதும் பொருந்தும்.

எனவே இலங்கையின் வெளியுறவு அமைச்சின் வழிகாட்டுதல்களை, உள்வரும் அனைத்து அமெரிக்க பணியாளர்களும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தூதரகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.