சிறையில் வாடிய கைதிகளுக்கு மறுவாழ்வளித்த கோட்டாபய!
சிறு தவறுகளால் சிறைப்படுத்துப்பட்டுள்ள 444 சிறைக்கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்.
இதன்படி, தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ள, 29 சிறைச்சாலைகளைச் சேர்ந்த 18 பெண்கள் உட்பட 444 கைதிகளே இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இதேவேளை கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடைய எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.