
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து உண்மைக்கு புறம்பானது...!
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் சுகாதார அமைச்சுக்கு 230 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கியதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை கட்டப்படுத்த உலக சுகாதார அமைப்பினால் இந்நாட்டுக்கு 1.9 மில்லியன் டொலர்கள் மாத்திரமே வழங்கப்பட்டதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜீன் மாதம் 05ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அந்த பணத்தில் 855,869 அமெரிக்க டொலர்கள் மாத்திரமே செலவுக்காக இலங்கையில் உள்ள உலக சுகாதார அமைப்பின் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாகவும் மிகுதி பணம் மற்றைய திட்டங்களுக்காக வழங்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.