தேரேறி அருள் பாலிக்கும் சந்நிதியான்!

தேரேறி அருள் பாலிக்கும் சந்நிதியான்!

யாழ்ப்பாணம், வடமராட்சி - தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்று வருகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் வகையிலேயே இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.