
செல்வசந்திநி ஆலய தேர்த்திருவிழா தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்
வரலாற்றுப் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் தேர்த்திருவிழா நாளைய செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு இடம்பெறவுள்ளது.
மறுதினமான புதன்கிழமை காலை தீர்த்தத் உற்சவமும் இடம்பெறும்.
அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு கடந்த ஆவணி 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
திருவிழாக் காலங்களில் அன்னதானம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னரே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.