தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் அகிலவிராஜ் காரியவசத்திடம் விசாரணை..!
முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு பல்வேறு தரப்பினருடன் தொடர்ச்சியாக விசாணைகளை முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்திற்கு சென்ற குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.