தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை 17.9ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.

மீன்களை ஏற்றிச் சென்ற கெப் வாகனம் ஒன்றின் பின்புறத்தில் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து | Accident On Expressway

விபத்தின் போது, காரில் மூன்று பேர் பயணித்துள்ள நிலையில் அவர்களில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.