சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த மூன்று பேர் கைது
சட்டவிரோத முறையில் நாட்டில் தங்கியிருந்த நைஜீரிய பிரஜைகள் மூன்று பேர் கல்கிஸ்ஸை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய அவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
உரிய வீசா அனுமதி பத்திரம் இன்றி அவர்கள் நாட்டில் தங்கியிருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களுக்கு ஆதரவு வழங்கிய ஒருவரும் இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.