கொழும்பில் பாதசாரிகளுக்கு ஏற்படும் பாதிப்பு
கொழும்பில் ஏற்படும் கடுமையான வாகன நெரிசல் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
நெரிசல் ஏற்படும் போது போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயற்படுவோரினால் இவ்வாறான நிலை ஏற்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மக்கள் நடந்து செல்லும் பாதைகளில் தமது மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதால் இந்த நெருக்கடி நிலை ஏற்படுகிறது.
இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒட்டுநர்களை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.