கொரோனா அச்சம் – மேலும் 398 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா அச்சம் – மேலும் 398 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதற்கமைய கொரோனா அச்சம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் கட்டாரில் சிக்கித் தவித்த மேலும் 398 இலங்கையர்கள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

தோஹாவிலிருந்து கட்டார் எயார்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் அதிகாலை 1.45 மணிக்கு அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர்.  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.