![](https://yarlosai.com/storage/app/news/a0ad1a4c8950eeb0e3a52093fc9ad534.jpg)
ரணில் தொடர்பில் விரைவில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்
முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்குவதா என்பது தொடர்பில் விரைவில் அரச உயர்மட்டம் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு மீளப் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே ரணில் தொடர்பிலும் இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த 81 உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சு வட்டார தகவல்கள் தெரிவித்தன.