அதி வேகமாக வந்த சொகுசு கார்! தீவிர சிகிச்சைப்பிரிவில் இராணுவ வீரர்

அதி வேகமாக வந்த சொகுசு கார்! தீவிர சிகிச்சைப்பிரிவில் இராணுவ வீரர்

கண்டி - அஸ்கிரிய விகாரையின் நுழைவாயிலை நோக்கி அதிவேகமாக வந்த கார் அஸ்கிரியா கோயில் வளாகத்தில் மோதியது.

இதனால் அஸ்கிரிய மகா விகாரையில் பாதுகாப்பு கடமையில் இருந்த இராணுவ வீரரும் பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை (30) இந்த விபத்து நிகழ்ந்ததோடு, விபத்தில் பலத்த காயமடைந்த சிப்பாய் கண்டி தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்கு காரணமான சாரதி கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.