
வடக்கு மாகாண கூட்டுறவுச் சங்கங்கள், நிறுவனங்களின் செயற்பாடுகளில் திருப்தி இல்லை – வடக்கு ஆளுநர்
வடக்கு மாகாண கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்திகரமானதாக இல்லை என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணக் கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்து கொண்ட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் ஆளுநர் செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது மேலும் கருத்து தெரிவிட்த்ஹ ஆளுநர் “இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி என்பது கூட்டுறவுத் துறையின் செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தே அமைந்துள்ளது.
சீனாவிலுள்ள பெரும்பாலான வங்கிகள் விவசாய வங்கிகளே. இத்தாலி நாட்டிலுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் கூட்டுறவுத் துறையினரதே. அங்கிருக்கும் இறைச்சி, பற்பசை உட்பட அனைத்தும் கூட்டுறவுத்துறையின் தாயாரிப்புக்களாவே காணப்படுகின்றது.
எனவே, கூட்டுறவுத்துறை என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக அமைகின்றது. ஆனால், நமது மாகாணத்தில் அத்துறையொரு தோல்வியின் துறையாக மாறிக்கொண்டிருக்கின்றது.” என கூறினார்.