இணுவில் ஏழாலைப்பகுதிகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டோர் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
இணுவில் , ஏழாலைப் பகுதியிலிருந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 28 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும், இருப்பினும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் 13 குடும்பங்களைச் சேர்ந்த 61பேர் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை 13 பேரிடமும் புதன் கிழமை மேலும் 15 பேரிடமும் மாதிரிகள் பெறப்பட்டு பீ.சி.ஆர் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.
இவற்றில் செவ்வாய் கிழமை பெறப்பட்ட 13 மாதிரிகள் கொழும்பிலும், ஏனைய 15 மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்ட நிலையில் 28 பேருக்குமே கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இவர்கள் அனைவரையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலிற்கு உட்படுத்தி 14ம் நாளும் சோதனையின் பின்பே விடுவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.