கொட்டகலையில் நடந்த கோர விபத்து..!
கொட்டக்கலையிலிருந்து ஹட்டன் வரையிலான பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். முச்சக்கர வண்டி ஒன்றை முந்திச்செல்ல முயற்சித்த வேளையில் முச்சக்கர வண்டியின் பக்கக்கண்ணாடி உந்துருளி ஓட்டுனரின் உடம்பில் உரசியதை தொடர்ந்து விழுந்துள்ளார் எனவும் தலைக்கவசம் முறையாக அணியாமையினால் தலைக்கவசம் கழன்று வீசுண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உந்துருளி ஓட்டுனரின் தலை வீதியிலுள்ள கல் ஒன்றில் மோதியதால் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது. சிகிச்சைகளை கொண்ட வைத்தியர்களை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 29 வயதுடைய மனோகரன் கணேசன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.