திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி!

திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் புதையல் தோண்டிய வைத்தியரின் மனைவி!

வவுனியா நத்திமித்திரகமவில் உள்ள கிப்புல்கல மலையில் புதையல் தோண்டிகொண்டிருந்த வைத்தியர் ஒருவரது மனைவி உட்பட மூன்றுபேர் நேற்று மாலை பொஹஸ்வெவ பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் . இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,

கிப்புல்கல மலைப்பகுதியில் சுமார் இரண்டு அடி ஆழத்திற்கு புதையல் தோண்டுவதாக பொஹவெஸ்வாவே பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் அடிப்படையில் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் மூவரை கைது செய்துள்ளதுடன் பூஜைப்பொருட்கள், பித்தளை மோதிரங்கள் , புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தும் உபகரணங்கள் என்பன அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வவுனியா நந்திமித்ரகமவை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த புதையல் தோண்டிய நந்திமித்ரகமவிலுள்ள கிம்புல்கல மலைப்பகுதியானது மிகவும் பழமை வாய்ந்த புராதன இடிபாடுகளைக்கொண்ட தொல்பொருள் திணைக்களத்திற்கு சொந்தமான பகுதியாகும் . கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களையும், உபகரணங்களையும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.