யாழ் - களனி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யார்? வெளிவந்த தகவல்!

யாழ் - களனி பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யார்? வெளிவந்த தகவல்!

யாழ்ப்பாணம் மற்றும் களனி ஆகிய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் யார் என்பது நாளையதினம் வெளியாகலாமென தகவல் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை தெரிவு செய்வதற்கான புதிய நியமங்கள், நடைமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை கடந்த மே மாதம் வெளியிடப்பட்டது.

புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக கோரப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற்று மூவர் முன்மொழியப்பட்டார்கள்.

குறித்த இரு பல்கலைக்கழகங்களதும் தெரிவுகள் அடங்கிய பரிந்துரைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் இரு பல்கலைக்கழகங்களதும் துணைவேந்தர் தெரிவுகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், நாளை இதுகுறித்த உத்தியோக பூர்வ அறிவித்தல் அனுப்பி வைக்கப்படலாமென ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.