
அமைச்சுப்பதவி குறித்து மைத்திரி என்ன கூறினார்? கிடைத்தது பதில்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் பதவிகள் கேட்டு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஏற்றுமதி அபிவிருத்தி துறை அமைச்சருமான ஜானக வக்கும்புற தெரிவித்தார்.
எம்பிலிபிட்டியவில் நேற்று நடைபெற்ற ஊ டகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னுடன் தனிப்பட்ட முறையில் அரசியல் மற்றும் பல விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
ஆனால் ஒரு போதும் அவர் தனக்கு அரசாங்கத்தில் உயர் பதவிகளோ அமைச்சு பொறுப்புக்களோ வேண்டும் என அழுத்தம் கொடுக்கவில்லை.
இந்த நாட்டின் அதி உயர் அதிகாரமுடைய ஜனாதிபதி பதவியை வகித்த தனக்குப் பதவி மோகம் இல்லை எனவும் ஆனால் எந்தப் பொறுப்பான பதவி கிடைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன் எனவும் அவர் என்னிடம் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு சட்ட த்தை உருவாக்குவதற்கு இந்நாட் டு மக்கள் 2/3 பெரும்பான்மை பலத்தை கொடுத்துள்ளனர்.
ராஜபக்ச சகோதரர்களின் தலைமைத்துவத்திற்கு இந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. மக்கள் கொடுத்த வரத்தினை நாங்கள் ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்ய மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்