பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்!
தேர்ச்சிப் பரீட்சை பெறுபேறுகள் கிடைத்தவுடன் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வௌியிடவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் ஜனிட்டா லியனகே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு 36 பாடநெறிகளுக்கான தேர்ச்சிப் பரீட்சைகள் நடைபெறுகின்றன.
பெரும்பாலான பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெட்டுப்புள்ளிகளை வௌியிடுவதற்கு குறித்த தேர்ச்சிப் பரீட்சைகளின் பெறுபேறுகள் வௌியிடப்பட வேண்டியது அவசியாகும்.
எனவே தேர்ச்சிப் பரீட்சை பெறுபேறுகள் கிடைத்தவுடன் பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகளை வௌியிடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.