விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரையால் தமிழர்களுக்கு பாதகம் ஏற்படும்! டக்ளஸ்
நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரின் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும் பெற்றுத் தரப்போவதில்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்காவின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் உரையாற்றிய விக்னேஸ்வரன், தமிழ் மக்களின் இருப்பு மற்றும் தமிழ் மொழி தொடர்பில் உரையாற்றியிருந்தார்.
இது தொடர்பில் தென்னிலங்கையில் எதிர்ப்ப வெளியாகியிருந்தன. இந்நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
நடைபெற்று முடிந்த தேர்தலில் வீணைக்கு வாக்களித்த மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கையும் எதிர்பார்ப்புக்களும் வீண் போகாத வகையில் என்னுடைய வேலைத் திட்டங்கள் அமையும்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன், தன்னுடைய நாடாளுமன்ற கன்னி உரையில் வெளியிட்ட கருத்துக்களை சமூக ஊடகங்களில் பெரிதாக சிலாகிக்கப்படுகிறது.
எனினும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளுக்கோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ எந்தவிதமான தீர்வினை இது பெற்றுத் தராது. பாதகங்களையே அதிகரிக்கும்.
பலமான மத்திய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில், குறித்த அரசாங்கத்துடன் எனக்கு இருக்கும் தேசிய நல்லிணக்கத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பேன்.
னியார் போக்குவரத்து சங்கங்களின் உரிமையாளர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் அமைச்சரினதும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதன் ஊடாகவும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் அடங்கிய கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும் என்றார்.