
மதிய உணவு வழங்குவதாக அழைத்துச் சென்று மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நடந்த கொடூரம்
மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவரை இங்கிரிய பொலிசார் கைது செய்தனர்.
கடந்த திங்கள்கிழமை (17) மதிய உணவு வழங்குவதாகத் தெரிவித்து குறித்த சிறுவனை வானில் ஏற்றி சந்தேக நபர் ஒருவரின் வீட்டுக்கு கொண்டு சென்றதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
அதன்பிறகு, சிறுவன் 63 மற்றும் 54 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களால் பலமுறை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டார்.
திருமணமான இரண்டு ஆண்களும் தங்கள் வாழ்க்கைத் துணையிலிருந்து பிரிந்து,வாழ்ந்து வருவதாகவும் அதில் ஒருவர் மகா-இங்கிரிய பகுதியிலும் மற்றயவர் ஒருகாம பகுதியிலும் வசிப்பதாகக் கூறப்படுகிறது.
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக ஹொரன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் ஹொரன மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 18- மாதங்களில் 12,968 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.