கொரோனா தொற்றால் இறந்தவரின் சடலத்தை எரிக்க விடாமல் தாக்குதல் -சடலத்தை தூக்கி கொண்டு ஓடிய உறவினர்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவரது உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து, கும்பலொன்று கல் வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர்கள் இறந்தவரின் உடலை எடுத்துக் கொண்டு ஓடும் பரிதாப நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்றுளளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ஜம்மு – காஷ்மீர் தோடா மாவட்டத்தில் வசித்த முதியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், அருகிலேயே அவரது உடலை எரிக்க முடிவு செய்தனர். ஆனால் கொரோனா தொற்றால் இறந்த அவரது உடலை எரிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஒரு கும்பல் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் உறவினர்கள் இறந்தவரின் உடலை எடுத்துக் கொண்டு ஓடும் பரிதாப நிலை ஏற்பட்டது.