யாழில் புதிய திரைப்படக் கல்லூரி! கலைஞர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

யாழில் புதிய திரைப்படக் கல்லூரி! கலைஞர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

யாழ் மாவட்டத்தில் புதிய திரைப்படக்கல்லூரி இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இக்கல்லூரியில் திரைப்படத்துறை, லைட்டிங், சவுண்ட் எடிட்டிங், வீடியோ எடிட்டிங், கலைத்துறை மற்றும் நடிப்புத் துறை தொடர்பான அனைத்து வகுப்புகளும் இடம்பெற உள்ளது.

ஊடகத்துறை, கலைத்துறை, திரைப்படத்துறை ஆகிய துறை சார் விரிவுரையாளர்கள் தலைமையில் வகுப்புகள் இடம்பெறவுள்ளது.

இத்திரைப்பட கல்லூரியை யாழ். பல்கலைக்கழகத்துடன் இணைத்து தொடர்ந்து மேற்கொண்டு செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்பட கல்லூரியை பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் பிரதிநிதிகளாக கலந்துகொண்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.