மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு
இலங்கை சனநாயக சோசலிசக்கரியரசின் 07 வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை தற்சமயம் நாடாளுமன்றில் நிகழ்த்தி வருகின்றார்.
இதன்போது மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று மக்களுக்காக சேவை செய்ய முன்னின்று செயற்படுவதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் உள்ள மக்கள் தற்சமயம் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினைக்கான தீர்வும் பெற்றுத்தரப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் இறப்பர் உற்பத்தி தேவையான உதவிகளை வழங்குவதுடன், இறப்பர் தொடர்பான தொழிலதிபர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.