விபத்தில் சிக்கிய காவற்துறை உத்தியோகத்தர்கள்

விபத்தில் சிக்கிய காவற்துறை உத்தியோகத்தர்கள்

பொலன்னறுவை - ஹபரன - ஹதமுன காவற்துறை சோதனை தரிப்பிடத்தில் கவனயீனமற்ற முறையில் பயணித்த பாரவூர்த்தி மோதுண்டு இரு காவற்துறை உத்தியோகத்தர்கள் காயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரும்பு கம்பி ஒன்றுடன் பாரவூர்த்தி மோதுண்ட நிலையில் கம்பி இரு காவற்துறை உத்தியோகத்தரை தாக்கியதனை தொடர்ந்து இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

பொலன்னறுவை காவற்துறை நிலையத்தில் பணிபுரியும் காவற்துறை உத்தியோகத்தர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பாரவூர்த்தி தப்பி சென்றுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.