பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் கைது

பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட இளைஞர், யுவதிகள் கைது

இலங்கையின் தென்பகுதி திஸ்ஸமஹராம - கிரிந்தவில் போதைப்பொருட்களுடன் பேஸ்புக் விருந்தில் ஈடுபட்ட இளைஞர்களும் யுவதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

தகவல் ஒன்றின் அடிப்படையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 10 ஆண்களும் 6 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்ட ஆண்கள் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள். யுவதிகள் கொழும்பைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தநிலையில் அனைவரும் இன்று திஸ்ஸமஹராம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவர்களை ஆகஸ்ட் 25ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.