
வழமைக்கு கொண்டு வருவது கடினம்! கையை விரித்தது மின்வலு அமைச்சு
அனல் மின் நிலையத்தின் செயற்பாட்டை குறுகிய காலத்திற்குள் வழமைக்கு கொண்டு வருவது கடினமென மின்வலு அமைச்சின் தலைவர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை வழமை நிலைக்கு கொண்டுவர முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மின் வழங்கலில் ஏற்பட்டுள்ள தடை தொடர்பில் செய்தியாளர்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
திடீர் மின் தடையால் ஏற்பட்ட மின்சார பிரச்சினைக்கு இவ்வார இறுதியில் தீர்வு வழங்கப்படும்.
மின் தடையால் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளும் தடைப்பட்டுள்ளது.
இதனால் எதிர்வரும் 4 நாட்களுக்கு ஒரு மணித்தியால மின் வெட்டை தொகுதி வாரியாக அமுல்படுத்த மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.