மேல்மாகாணத்தில் பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் 392பேர் கைது
மேல் மாகாணத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 392 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 6மணிமுதல் தொடங்கி இன்று அதிகாலை 5மணி வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துருகிரியவில் 1 கிலோ 416 கிராம் ஹெரோய்னுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உள்ளிட்ட 188 பேர், குறித்த சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார், அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அண்மைகாலமாக மேல் மாகாணத்தில் திடீர் சுற்றிவளைப்பு அடிக்கடி மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் பொலிஸார் கைது செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.