பகல் வேளைகளிலும் மின்சார துண்டிப்பை ஏற்படுத்துவதற்கு திட்டம்

பகல் வேளைகளிலும் மின்சார துண்டிப்பை ஏற்படுத்துவதற்கு திட்டம்

தேவை ஏற்படின் இரவு வேளைகளுக்கு மேலதிகமாக பகல் வேளைகளிலும் மின்சார துண்டிப்பை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளாக மின்சார சபை அறிவித்துள்ளது.

மாலை 6 மணி முதல் 10 மணி வரையில் நாடு முழுவதும் ஒரு மணித்தியாலத்திற்கு கட்டம் கட்டமாக மின்சாரத்தை துண்டிப்பதற்கு நேற்று தீர்மானிக்கப்பட்டது.

நாட்டில் நாளொன்றுக்கு 35 சதம் 44 கிஹாவோட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.

இதற்கமைய உச்சபயன்பாட்டு நேரத்தின் போது 2 ஆயிரத்து 203 தசம் 44 மொகாவோட்ஸ் மின்சாரம் தேவையாகவுள்ளது.

எவ்வாறாயினும் கெரவலபிட்டிய உப மின்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாளாந்த மின் உற்பத்தி 300 மொகாவோட்ஸ் குறைவடைந்தது.

அத்துடன் மின் உற்பத்தி தடைப்பட்டமையை அடுத்து நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் பணிகள் தடைப்பட்டன.

இதன்காரணமான நாட்டின் மின்சார உற்பத்தியில் 900 மொகா வோட்ஸ் குறைவடைந்துள்ளது.

இதனையடுத்து நாளாந்தம் மாலை 6 மணி முதல் 10 மணி வரையில் நாடு முழுவதும் ஒரு மணித்தியாலத்திற்கு கட்டம் கட்டமாக மின்சாரத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்தநிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வருவதற்கு இரண்டு நாட்கள் எடுக்கும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பகல் வேளைகளில் சூரிய சக்தியின் ஊடாக மின்சார உற்பத்தி இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் பகல் வேளைகளில் மின்சாரத்தின் தேவை அதிகரிக்கும்பட்சத்தில் ஒன்று தசம் 45 மணித்தியாலத்திற்கு மின்சாரத்தை துண்டிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை மின்சார துண்டிப்பை அடுத்து நீர் விநியோகத்தில் பாதிப்பு நிலவுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மின்பிறப்பாக்கி இல்லாத பியகம அம்பத்தலை மற்றும் கெத்ஹேன உள்ளிட்ட நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் காணப்படுகின்ற பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இலங்கை மின்சார சபையிடம் கோரியுள்ளது.