செல்வச்சந்நிதியில் கொடியேற்றம்! விதிக்கப்பட்டுள்ள தடை

செல்வச்சந்நிதியில் கொடியேற்றம்! விதிக்கப்பட்டுள்ள தடை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

அன்னதானக் கந்தன், விபூதி கந்தன் என அடியவர்களால் அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் அடியார்கள் புடைசூழ இடம்பெற்றது.

தற்போதைய கொரோனா சூழ்நிலை காரணமாக சமூக இடைவெளி பேணப்பட்டு சுகாதார நடைமுறைக்கு ஏற்றவாறு கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

அன்னதானம் மற்றும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு ஆலயத்திற்கு வரும் அடியவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை பரிசோதனை செய்யப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னரே ஆலயத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.