வெளி விவகார அமைச்சுக்குள் நடந்தது என்ன? விசாரணைக்கு தயாராகும் அரசாங்கம்
வெளிவிவகார அமைச்சில் முன்னெடுக்கப்படும் மேற்குலக நாடுகளின் நிகழ்ச்சி நிரல் தொடர்பாக விசாரணைகளை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சில் சேவையாற்றிய அதிகாரி ஒருவர், ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக செயற்பட்டார் என தெரியவந்ததை அடுத்து, அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அணி சேரா கொள்கைக்கு பதிலாக கொழும்பில் உள்ள மேற்குலக நாடுகளில் தூதரகங்களுடன் சம்பந்தப்பட்ட நடைமுறைகளை கையாண்டதாக வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சுக்குள் இதுவரையில் நடைமுறையில் இருந்து வந்த மேற்குலக நாடுகளுக்கு சார்பான நிகழ்ச்சி நிரலுக்கு பதிலாக ஆசிய நாடுகளுடன் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நடைமுறை கையாளப்பட உள்ளதாக தெரியவருகிறது.