
எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக 4 பேரின் பெயர்கள் பரிந்துரை
புதிய சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பெரும்பாலும் நியமிக்கப்படுவார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், எதிர்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் 4 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசீம், லக்ஷ்மண் கிரியெல்ல, பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் ஹர்ச டி சில்வா ஆகியோரின் பெயர்கள் இந்த பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை புதிய நாடாளுமன்றத்தின் சபை முதல்வராக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவும், ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளராக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவும் நியமிக்கப்படுள்ளனர்.
நாடாளுமன்ற அமர்வு நாளை மறுதினம் ஆரம்பமாகின்ற போது இதற்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.