ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடலொன்று இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிகொத்தவில் இன்று முற்பகல் 10.30மணி அளவில், கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதன்போது கட்சியின் எதிர்கால நடவடிக்கை குறித்து ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கும் நாட்டின் நலன்களுக்கும் பொருத்தமான, ஓர் இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவத்தை ஒப்படைக்க நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதாவது, ஐக்கிய தேசியக் கட்சியின் இளைய தலைவர்களுக்குப் புதிய பொறுப்புக்களை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றைத் திறம்படக் கையாண்டு முறையான நிர்வாகத்தை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கின்ற, கட்சி ஆதரவாளர்களின் மனங்களை வென்றெடுக்கின்ற ஒரு இளம் தலைவரிடம் கட்சியின் தலைமைத்துவப் பொறுப்பை ஒப்படைப்பதற்கு  குறித்த கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.