திருமண வீட்டில் ஒரே நொடியில் பறிபோன 21 உயிர்கள் ; இரவோடிரவாக அழிந்த குடும்பம்

திருமண வீட்டில் ஒரே நொடியில் பறிபோன 21 உயிர்கள் ; இரவோடிரவாக அழிந்த குடும்பம்

நேற்று  (28) பிற்பகல் தெற்கு ஷான் மாநிலத்தின் மோ பை கிராமத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றின் மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 35 பேர் படுகாயமடைந்துள்ளதாக மீட்புக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.  

மியான்மரின் ஷான் மற்றும் கரென்னி மாநிலங்களின் எல்லைப் பகுதியில் உள்ள மோபே (Moe Bye) கிராமத்தில் சனிக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

திருமண வீட்டில் ஒரே நொடியில் பறிபோன 21 உயிர்கள் ; இரவோடிரவாக அழிந்த குடும்பம் | 21 Killed In Myanmar Wedding Strike

திருமண ஏற்பாடுகள் 

 

இடம்பெயர்ந்த மக்களான மணமக்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

 விமானத்தின் சத்தம் கேட்டதாகவும், சிறிது நேரத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடைபெற்ற வீட்டிற்குச் சென்று பார்த்தபோது பலர் உயிரிழந்து கிடந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில், உள்ளூர் மக்கள் பகிர்ந்த புகைப்படங்களில் ஆறு உடல்கள் காணப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் குழந்தையும் அடங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், 21 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை. மியான்மர் ராணுவமும் இதுவரை இந்தத் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கவில்லை.

2021-ம் ஆண்டு ராணுவப் புரட்சிக்குப் பிறகு மியான்மரில் உள்நாட்டுப் போர் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.