யாழில் மாபெரும் பேரணி : தீயிலே எரிக்கப்பட்ட ராஜ்சோமதேவாவின் அறிக்கையும் உருவப்பொம்மையும்

யாழில் மாபெரும் பேரணி : தீயிலே எரிக்கப்பட்ட ராஜ்சோமதேவாவின் அறிக்கையும் உருவப்பொம்மையும்

புதிய இணைப்பு

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும் அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி தற்போது செம்மணி மனிதப் புதைகுழி பகுதியை வந்தடைந்துள்ளது.

அத்துடன் செம்மணி மனிதப்புதைகுழி அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானம் முன்பாக பெருமளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாக குறிப்பிட்டு வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை இதன்போது வாசிக்கப்பட்டது.

ராஜ்சோமதேவாவின் அறிக்கையையும் அவருடைய உருவப் பொம்மையையும் இவ்விடத்திலே தீயிட்டு எரிக்கப்போவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்திருந்த நிலையில் ராஜ்சோமதேவாவின் அறிக்கையையும் அவருடைய உருவப் பொம்மையையும் தீயிட்டு எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

இரண்டாம் இணைப்பு

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரித்தும் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்புப் போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது.

அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி செம்மணி மனிதப் புதைகுழியை நோக்கி நகர்ந்து செல்கின்றது.

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து பேராசிரியர் ராஜ் சோம தேவா நீதிமன்றுக்கு சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பலாம் என கூறப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும், இந்த விவகாரத்தில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட்டு தமக்கு நீதியை வழங்க வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமது உறவுகள் சித்திரவைதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டு இந்த செம்மணி மனிதப் புதைகுழியிலே புதைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளாக இருக்கலாம் எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன்போது ”செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டும்”, “ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை முற்றாக நிராகரிக்கின்றோம்“, “எமது உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்“ ஆகிய கோசங்களை எழுப்பியவாறு பேரணியை முன்னெடுக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தவிசாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டுள்ளனர்.

 

முதலாம் இணைப்பு

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் இன்று (17) காலை 10 மணியளவில் செம்மணிச் சந்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கையை எதிர்த்து இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

 சர்வதேச விசாரணை

இதன்போது அரியாலை தபால் கட்டை சந்தியிலிருந்து, செம்மணி புதைகுழி வரையும் நடை பவனியும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

யாழில் மாபெரும் பேரணி : தீயிலே எரிக்கப்பட்ட ராஜ்சோமதேவாவின் அறிக்கையும் உருவப்பொம்மையும் | Protest In Jaffna Justice For Chemmani Mass Grave

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது ஆதரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மாபெரும் பேரணி : தீயிலே எரிக்கப்பட்ட ராஜ்சோமதேவாவின் அறிக்கையும் உருவப்பொம்மையும் | Protest In Jaffna Justice For Chemmani Mass Grave

யாழில் மாபெரும் பேரணி : தீயிலே எரிக்கப்பட்ட ராஜ்சோமதேவாவின் அறிக்கையும் உருவப்பொம்மையும் | Protest In Jaffna Justice For Chemmani Mass Grave

யாழில் மாபெரும் பேரணி : தீயிலே எரிக்கப்பட்ட ராஜ்சோமதேவாவின் அறிக்கையும் உருவப்பொம்மையும் | Protest In Jaffna Justice For Chemmani Mass Grave

யாழில் மாபெரும் பேரணி : தீயிலே எரிக்கப்பட்ட ராஜ்சோமதேவாவின் அறிக்கையும் உருவப்பொம்மையும் | Protest In Jaffna Justice For Chemmani Mass Grave

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery