6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை
நாட்டில் நிலவும் வானிலை காரணமாக 06 மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு முன்னெச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (04) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (05) பிற்பகல் 4:00 மணி வரையிலான 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்.
இதற்கமைய, பல பிரதேசங்களுக்கு எச்சரிக்கை மட்டங்களின் கீழ் (Amber மற்றும் Yellow) பின்வருமாறு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
மட்டம் 2 - ஆபத்து (Amber)
மாத்தறை மாவட்டம்: கொடபொல
நுவரெலியா மாவட்டம்: நில் தண்டாஹின்ன
இரத்தினபுரி மாவட்டம்: கலவானை மற்றும் கொடகவெல
மட்டம் 1 - அவதானமாக இருங்கள் (Yellow)
பதுளை மாவட்டம்: வெலிமடை, ஹப்புத்தளை, எல்ல, பசறை, கந்தகெட்டிய, ஹல்தும்முல்லை மற்றும் மீகஹகிவுல
கண்டி மாவட்டம்: யட்டிநுவர, மாதம்பே, ஹதரலியத்த, தும்பனை, உடுநுவர, தொலுவ, மெததும்பர மற்றும் உடதும்பர
கேகாலை மாவட்டம்: ரம்புக்கனை, ருவன்வெல்ல, அரநாயக, யட்டியாந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய, கேகாலை மற்றும் மாவனெல்லை
மாத்தளை மாவட்டம்: பல்லேபொல
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவை, நோர்வூட், வலப்பனை, ஹங்குரன்கெத்த மற்றும் கொத்மலை மேற்கு
இரத்தினபுரி மாவட்டம்: கஹவத்தை மற்றும் பெல்மடுல்ல
சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், அவசர காலத்தில் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.